Monday, 24 February 2014

                              அப்பாவின் நிழல்படம் 


இதுவரை நான் பார்த்ததில்லை 
அப்பாவை நிஜத்திலும் 
நேரிலும் 

அப்பா எடுத்த கல்யாண 
போட்டோவோ கரைந்து 
விட்டது அப்பாவின் 
\அஷ்தியோடு 

காதலித்த நேரத்தில் என் 
அம்மாவிடம்  கொடுத்த 
அரும்பு மீசை போட்டோவை 
யாரிடமும் கட்டுவதில்லை 
நன் உட்பட 

கோபத்தோடு வீட்டை விட்டு 
வெளியேறிய போது 
நிலையில் தலை \இடித்து கிழே 
விழுந்தது நிலை கண்ணாடி 

கிழே குனிந்து கண்ணாடி 
சில்லை பொறுக்கிய போது 
கண்ணாடி கேட்டது 

அப்பாவின் நிஜ படம் நீ 
இருக்க ஏனடா தேடுகிறாய் 
நிழல் படத்தை .


                                                      kalகார்த்திக் 

Friday, 21 February 2014

                            ஹைக்கூ ....


எங்கே காட்டு பார்க்கலாம் 
என் எச்சில் படாத உன் 
முகத்தின் பாகத்தை ........

உன் கனவில் பேய்கள் 
வருவதாய் சொன்னாய் 
நான் நம்பவில்லை ...
தேவதைகள் கனவில் 
பேய்கள் வருவதில்லை .......

நீ தொலைந்து போகும் 
நேரம் எதுவென கேட்கிறாய் 
நீ உடன் இருக்கும் நொடி 
என்கிறேன் ............
அப்படினா இப்ப என 
கன்ன குழி விழ சிரிக்கிறாய் .....

கவிதை எழுத மழை இயற்கை 
குழந்தை என எவ்வளவோ 
இருக்க ஏன் என்னை பற்றி 
மட்டும் எழுதுகிறாய் என்கிறாய் 

பாவம் உனக்கு தெரியவில்லை 
இவை அனைத்தும் நீ என .....

                                                           kalகார்த்திக்  .....


                               பழைய m80


     அது ஒரு மழைக்காலம் விண்ணின் விழுதுகள் மண்ணை 
      தாக்கி கொண்டிருக்கும் ......மழைக்காலம் 
     வேண்டாம் என்று மண் சொல்ல போதும் என்று 
     மரங்கள் அலற .....மண் மீது தான் கொண்ட காதலை 
     மழைத்துளியாய் அனுப்பி கொண்டிருந்தது வானம் 
     பள்ளி முடிந்தது உன் தந்தையுடன் வந்துகொண்டிருக்கிறாய் 
     அந்த பழைய m80 .............உன்னை தொடர்ந்து வந்து .............
      கொண்டிருக்கிறேன் என் சைக்கிளில் .......உன் மீது பட்ட 
      காற்று என் மீது பட குளிரிலும் வெப்பமாகிறது 
       என் உடல் ....எவ்வளவு வேகமாய் போனாலும் 
       என் சைக்கிளை முந்த முடியவில்லை ....
       நீ செல்லும் அந்த பழைய m80..............ஆல் 
       ஆம் ..........
      அதற்கும் தெரிந்து இருக்கிறது உயிர் பின்னே வர 
      உடல் மட்டும்  எப்படி முன் செல்வதென்று .


                                                        kalகார்த்திக் .......